வித்­தியா படு­கொலை வழக்கின் மேன்­மு­றை­யீட்டு விசா­ரணை இன்று

Published By: Vishnu

09 Aug, 2018 | 08:10 AM
image

யாழ்ப்­பாணம் – புங்­கு­டு­தீவு மாணவி வித்­தியா படு­கொலை வழக்­கில் ட்­ரயல் அட்பார் நீதி­மன்­றினால் 7 எதி­ரி­க­ளுக்கு வழங்­கப்­பட்ட மரண தண்­டனைத் தீர்ப்பை எதிர்த்து குற்­ற­வா­ளி­களால் மேற்­கொள்­ளப்­பட்ட மேன்­மு­றை­யீட்டின் மீதான விசா­ர­ணை­யா­னது இன்­றைய தினம் உயர் நீதி­மன்றில் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.

இந்த மேன்முறை­யீட்டின் மீதான விசா­ர­ணை­யா­னது 5 நீதி­ய­ர­சர்­களை உள்­ள­டக்­கிய நீதி­ய­ர­சர்கள் குழுவினர் முன்­னி­லை­யி­லேயே இடம்­பெ­ற­வுள்­ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு குறித்த மாணவி பாட­சாலை செல்லும் போது கடத்திச் செல்­லப்­பட்டு கூட்டு பாலியல் வல்­லு­றவின் பின்னர் கொலை செய்­யப்­பட்­டி­ருந்தார். இக் கொலைச் சம்­பவம் தொடர்­பாக சட்­டமா அதி­பரால் தாக்கல் செய்­யப்­பட்ட குற்றப் பத்­திரம் மீதான வழக்கு விசா­ர­ணை­யா­னது தமிழ்மொழி பேசும் 3 மேல் நீதி­மன்ற நீதி­ப­திகள் அடங்­கிய ட்ரயல் அட்பார் நீதி­மன்­றினால் விசா­ரணை செய்­யப்­பட்டு தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டி­ருந்­த­து.

இதன்­படி குற்­றஞ்­சாட்­டப்­பட்ட 9 சந்­தே­க­ந­பர்­களில் இருவர் நிர­ப­ரா­தி­கள் என தீர்ப்பளிக்கப்பட்டு விடு­தலை செய்­யப்­பட்ட நிலையில் ஏனைய 7 பேருக்கும் கடந்த வருடம் ட்ரயல் அட்பார் நீதி­மன்றால் மரண தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்­நி­லையில் தீர்ப்­ப­ளிக்­கப்­பட்ட அந்த 7 குற்­ற­வா­ளி­களும் தமக்கெதி­ரான தண்­ட­னையை எதிர்த்து தமது தரப்பு சட்­டத்­த­ர­ணிகளினூடாக மேன்­மு­றை­யீடு செய்­தி­ருந்­தனர்.

இதன்­படி இந்த வழக்கின் விசாரணையானது இன்­றைய தினம் காலை 9.30 மணிக்கு ஆரம்­ப­மா­க­வுள்­ள­துடன் அதற்­காக தண்­டனை விதிக்­கப்­பட்ட கைதிகள் 7 பேரையும் உயர் நீதி­மன்றில் முன்­னி­லைப்­ப­டுத்­து­மாறு சிறைச்­சாலை அதி­கா­ரி­க­ளுக்கு உத்­த­ரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02