அமெரிக்காவின் நியூயார்க்கில் அமைந்துள்ள வைத்தியசாலை ஒன்றில் இன்று துப்பாக்கியுடன் நுழைந்த நபர் இரண்டு முதியவர்களை சுட்டுக்கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் இருக்கும் வல்ஹல்லாவில் உள்ள வெஸ்ட்செஸ்டர் வைத்தியசாலைக்குள் இன்று துப்பாக்கியுடன் நுழைந்த நபர் 70 வயதுடைய இருவரை சுட்டுக்கொன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலையாளி பின்னர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறநதுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சம்பவ இடத்தில் இருந்து துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், கொலையாளி குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.