ஓய்வுபெற்ற புகையிரத இயந்திர சாரதிகளை நாளை காலை 6.00 மணிக்கு சேவைக்கு சமூகமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த இந்த அழைப்பினை இலங்கை போக்குவரத்து அமைச்சு விடுத்துள்ளது.

புகையிரத இயந்திர சாரதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் பயணிகள் பெரும் அசெளகரியங்கள‍ை எதிர்நோக்கி வருகின்றனர். இந் நிலையில் நாளை காலை ஓய்விலிருக்கும் அனைத்து புகையிரத இயந்திர சாரதிகளையும் பணிக்கு திரும்புமாறு தெரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.