சர்­வ­தேச இருபதுக்கு 20 போட்­டி­களில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்கள் பட்­டி­யலில் இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் திலகரத்ன டில்ஷான் 2ஆவது இடத்­துக்கு (1676 ஓட்டங்கள்) முன்­னேறியுள்ளார். நியூ­ஸி­லாந்து வீரர்கள் பிரெண்டன் மெக்­கல்லம் (2140 ஓட்டங்கள்) முத­லி­டத்­திலும், மார்டின் குப்தில் (1666 ஓட்டங்கள்) 3ஆவது இடத்­திலும் உள்­ளனர்.

மேலும், இரு­ப­துக்கு 20 போட்­டி­களில் அதிக பவுண்­ட­ரிகள் அடித்­த­வர்­களின் வரி­சையில் முத­லி­டத்தில் உள்ள மெக்­க­லத்தை (199 பவுண்­ட­ரிகள்) டில்ஷான் சமன் செய் துள்ளார்.

இந்த ஆண்டில் விளை­யா­டி­யுள்ள 7 இருபதுக்கு 20 இன்­னிங்ஸ்களில் டில்­ஷானின் சரா­சரி ஓட்டக் குவிப்பு 12.28 மட்­டுமே. அவர் 7 இன்­னிங்ஸ்களில் 86 ஓட்டங் களை எடுத்­துள்ளார்.

2015 ஆம் ஆண்டு கடை­சி­யாக விளை­யா­டிய 2 இருபதுக்கு 20 போட்­டிகளிலும் டில்ஷான் அரை சதம் அடித்­தி­ருந்தார்.