”உடற்பயிற்சியுடன் கூடிய இதய கண்காணிப்பு நிலையம் திறந்துவைப்பு”

Published By: Daya

08 Aug, 2018 | 02:06 PM
image

ஐக்கிய இராட்சியத்தில் உள்ள மன்னார் நலன்புரி ஒன்றியம் மற்று ஐக்கிய இராட்சியம் ஆர்.ஆர். அமைப்பு ஆகியவற்றின் உதவியுடன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட 'உடற்பயிற்சியுடன் கூடிய இதய கண்காணிப்பு நிலையம்' இன்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இயக்குனர் வைத்திய கலாநிதி கில்றோய் பீரிஸ் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வின் போது வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு குறித்த நிலையத்தை திறந்து வைத்தார்.

ஐக்கிய இராட்சியத்தில் உள்ள மன்னார் நலன்புரி ஒன்றியம் மற்று ஐக்கிய இராட்சியம் ஆர்.ஆர். அமைப்பு ஆகியவற்றின் உதவியுடன் சுமார் 2.8 மில்லியன் ரூபாய் நிதி உதவியுடன் பெற்றுக்கொள்ளப்பட்ட உடற்பயிற்சியுடன் கூடிய இதய கண்காணிப்பு உபகரண தொகுதிகள் கையளிக்கப்பட்டிருந்த நிலையில் வைபவ ரீதியாக குறித்த நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த உடற்பயிற்சி நிலையத்தின் ஊடாக இதயம் சார்ந்த நோய்களை கண்டறிந்து கொள்ள முடியும்.

குறித்த நிகழ்வில்  ஐக்கிய இராட்சியத்தில் உள்ள மன்னார் நலன்புரி ஒன்றியத்தின் பிரதி நிதி மைக்கல் சுப்பிரமணியம்,சர்வமத தலைவர்கள், வைத்தியர்கள்,விசேட வைத்திய நிபுணர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

அதனைத்தொடர்ந்து வடமாகாண சுகாதார அமைச்சினால் சகல வசதிகளையும் கொண்ட அம்புலன்ஸ் வண்டி ஒன்று மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டது.

குறித்த அம்புலன்ஸ் வண்டியை வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை இயக்குனர் கில்றோய் பீரிஸீடம் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46