அமைச்சர் மனோ கணேசன் வடக்கு, கிழக்கிற்கு வந்து எமக்கு அறிவுரை கூறவேண்டிய அவசியமில்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மனோகணேசன் வடக்கு கிழக்கிற்கு சென்று அறிவுரை கூறுவது மற்றும் அரசியல் நிலைமையை  குழப்புவது தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டும்.

வடக்கு, கிழக்கு தவிர்ந்து தமிழர்கள் வாழும் ஏனைய இடங்களில் போட்டியிடுவது தொடர்பான முடிவை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எடுக்க முடியும்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் மனோகணேசன் சந்தித்த நெருக்கடிகள் பலவற்றை சுமந்திரன் தீர்த்து வைத்தார் அது குறித்து  மனோகணேசன் தெரிவிக்க வேண்டும்.

அத்துடன் புதிய அரசியலமைப்பு உருவாவது உறுதி கூடுதலான  அதிகாரத்துடன் அரசியலமைப்பு வருகின்றபோது அதனை மக்களிடம் எடுத்துச்செல்ல நாங்கள் தாயார் எனவும் அவர் குறிப்பிட்டார்.