(இரோஷா வேலு) 

திக்வெல்ல நகரில் சட்டவிரோதமான முறையில் எதுவித அனுமதிப் பத்திரமுமின்றி நடாத்திச் செல்லப்பட்ட இறுவெட்டுக்கள் விற்பனை செய்யும் நிலையமொன்றிலிருந்து சிங்கள திரைப்படங்களடங்கிய  இறுவெட்டுக்கள் மற்றும் ஆபாச வீடியோக்கள் அடங்கிய  இறுவெட்டுக்களையும்  மாத்தறை விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் கடையின் உரிமையாளரையும் கைது செய்துள்ளனர். 

இச் சம்பவத்தின் போது திக்வெல்லையைச் சேர்ந்த 27 வயதுடைய நபரொருவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவரை கைது செய்த வேளையில் கடையிலிருந்து சிங்கள திரைப்படங்களடங்கிய 148 இறுவெட்டுக்களும், ஆபாச வீடியோக்கள் அடங்கிய 100 இறுவெட்டுக்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

இதன்போது கைது செய்யப்பட்டவர் மேலதிக விசாரணைகளுக்காக மாத்தறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், மாத்தறை பொலிஸார் அவரை இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.