புஸல்லாவை, சோகம தோட்டம் மேற்பிரிவில் 15 பேர் குளவிக் கொட்டுக்கிலக்காகி புஸல்லாவை வாயக்கப்பட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

குறித்த இச் சம்பவமானது நேற்று மாலை இடம்பெற்றுள்ளதுடன் குளவிக் கொட்டு தாக்குதலுக்கிலக்கான 15 பேரில் 5 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதுடன் ஏயை 10 பேரும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.