முல்லைத்தீவு நீதிமன்ற சிறைச்சாலை கட்டத்தில் இருந்து நான்கு கைதிகள் நேற்று மாலை   தப்பிஓடியுள்ள நிலையில் கொலைகுற்றவாளி உள்ளிட்ட இரண்டு பேர் தற்போதுவரை பிடிபட்டுள்ளதாக   முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில் கடந்த 23.05.18 இளைஞன் கொலையினை மேற்கொண்ட சுண்ணாகத்தினை சேர்ந்த கொலைக்குற்றவாளி கடந்த 31.05.18 அன்று முல்லைத்தீவு பொஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

மற்றும் கடந்த 27.06.18 அன்று முல்லைத்தீவு நகர் கள்ளப்பாட்டு உள்ளிட்ட பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சபம்பவங்களுடன் தொடர்புடைய ஏழு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். அதில் மூன்று குற்றவாளிகளும் இன்று விசாரணைக்காக முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் கொண்டுவரப்பட்டுள்ளார்கள் .

குறித்த நபர்கள்  விசாரணைக்காக நீதிமன்ற சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்ட வேளை நீதிமன்ற சிறைச்சாலை பொலிஸாருக்கு தெரியாத நிலையில் தப்பி ஒடியுள்ளார்கள்.

இவர்களை தேடும் பணியில் முல்லைத்தீவு பொலிஸார் ஈடுபட்டிருந்த நிலையில் முல்லைத்தீவு செல்வபுரம்பகுதியில் கொலைக்குற்றவாளி உட்பட இரண்டுபேரை பிடித்துள்ளதாகவும் மேலும் இரண்டுபேரை தேடும்பணி தொடர்வதாகவும் முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.