தமிழக முன்னாள் முதல்வர் மு கருணாநிதியின் உடலை மெரீனாவில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்குமாறு தமிழக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருணாநிதியின் உடலை மெரீனாவில் அடக்கம் செய்ய இடஒதுக்குமாறு திமுக தலைமை விடுத்த வேண்டுகோளை  மாநில அரசாங்கம் நிராகரித்த பின்னர்  திமுக தாக்கல் செய்த மனுவை ஆராய்ந்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதற்கமைய ஒதுக்கப்பட்ட இடத்திற்கான வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.