மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி செலுதத்தியுள்ளார்.

இன்று காலை 10 20 மணியளவில் சென்னை சென்ற மோடியை சென்னை விமான நிலையத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இந்லையில் சென்னை ராஜாஜி மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு பிரதமர் மோடி சுமார் 10.45 மணியளவில் அஞசலி செலுத்தினார்.

அவர்களை தொடர்ந்து பகல் 12.35 மணிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், 12.45 மணிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோரும் அஞ்சலி செலுத்த செல்லவுள்ளனர்..

காங்கிரஸ் கட்சியின் குலாம் நபி ஆசாத், வீரப்ப மொய்லி ஆகியோர் 12.40 மணிக்கும் அஞ்சலி செலுத்துகின்றனர். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மதியம் 2:20க்கு சென்னை செல்கிறார்..

கேரள ஆளுநர் சதாசிவம், முதல்வர் பினராயி விஜயன், எதிர்க்கட்சித் தலைவர் சென்னிதாலா ஆகியோர் 1.30 மணிக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.