தமிழக முன்னாள் முதல்வர் மு கருணாநிதியின் உடலை மெரீனாவில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்குமாறு தமிழக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருணாநிதியின் உடலை மெரீனாவில் அடக்கம் செய்ய இடஒதுக்குமாறு திமுக தலைமை விடுத்த வேண்டுகோளை  மாநில அரசாங்கம் நிராகரித்த பின்னர்  திமுக தாக்கல் செய்த மனுவை ஆராய்ந்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த தீர்ப்பிற்காக காத்திருந்த ஸ்டாலின் தொண்டர்களை நோக்கி கண்ணீர் மல்க கைகூப்பியுள்ளார்.

இறந்தும் போராடிய கருணாநிதி பெற்றுத்தந்த வெற்றி என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.