இலங்கை இளம் தொழில் முயற்சியாளர்கள் சம்மேளனம் (The Chamber of Young Lankan Entrepreneurs (COYLE) மற்றும் ஜப்பான் வெளி வர்த்தக அமைப்புடன் (Japan External Trade Organization (JETRO) ஆகியன இணைந்து இலங்கையில் முதல்முறையாக "Sri Lanka Corporate Health & Productivity Awards" என்ற விருதுகள் நிகழ்வினை ஏற்பாடு செய்யத் திட்டமிட்டுள்ளமை தொடர்பில் அறிவித்துள்ளன.

ஆரோக்கியம் மற்றும் உற்பத்தித்திறன் மேலாண்மையில் ஈடுபட்டுள்ள ஸ்தாபனங்களுக்கு பொது இனங்காணல் அங்கீகாரத்தை அதிகரித்துரூபவ் அதன் மூலமாக இத்தகைய மேலாண்மை நிகழ்ச்சித்திட்டங்களை ஊக்குவிப்பதற்காகவே நாம் இந்த விருதுகள் நிகழ்வினை ஆரம்பித்துள்ளோம். முதன்முறையாக இடம்பெறவுள்ள இந்த நிகழ்வு 2019 பெப்ரவரியில் நடாத்தப்படவுள்ளது. 

பொருளாதார, வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சு மற்றும் டோக்கியோ பங்குச் சந்தை ஆகியவற்றால் ஜப்பானில் நடாத்தப்பட்ட “ஆரோக்கியம் மற்றும் உற்பத்தித்திறன் பங்குத் தெரிவு” நிகழ்ச்சித்திட்டத்தின் அடிப்படையிலேயே எமது செயற்பாடுகள் அமைந்துள்ளன. நீண்ட கால கோணத்தில் நிறுவனத்தின் பெறுமானத்தை மேம்படுத்திக் கொள்வதற்கு முன்னுரிமையளிக்கின்ற முதலீட்டாளர்களுக்கான கவர்ச்சியான ஒரு முதலீட்டுத் தெரிவாகரூபவ் தெரிவு செய்யபட்ட ஸ்தாபனங்களை ஊக்குவிப்பதே இச்செயற்திட்டத்தின் நோக்கமாகும்.

குறிப்பாக தளம்பல் நிலவுகின்ற பொருளாதார காலகட்டங்களில் பெறுபேற்றுத்திறனை உச்சப்படுத்திக் கொள்வதற்கு நிறுவன ஆரோக்கிய செயற்திட்டங்கள் மிகவும் முக்கியமானவை. இத்தகைய செயற்திட்டங்கள் ரூடவ்டுபாடுரூபவ் தக்கவைப்பு, உற்பத்தித்திறன் மற்றும் பெறுபேற்றுத்திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதாக நிரூபிக்கப்பட்டுள்ளதுடன் இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து ஆரோக்கியமான மற்றும் எதையும் சாதிக்கலாம் என்ற மனப்பாங்கு கொண்ட தொழிற்படையைப் பேணி அதன் மூலமாக உயர் உற்பத்தித் தரம் மற்றும் வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றை வழங்க இடமளிக்கின்றது. தற்போதைய சவால்மிக்க சர்வதேச பொருளாதார தோற்ற நிலைமையில் உற்பத்தித்திறன் மற்றும் பெறுபேற்றுத்திறன் ஆகியவற்றை தொடர்ந்தும் மேம்படுத்துவதில் நிறுவனங்கள் பாரிய அழுத்தங்களை எதிர்கொள்கின்றன. சில நிறுவனங்களைப் பொறுத்தவரையில் தொடர்ந்தும் வர்த்தகத்தை முன்னெடுப்பதற்கு மேம்பாடுகளை அடைய வேண்டியது மிகவும் அவசியமாகக் காணப்படுவதுடன் அந்த வகையில் நலன்பேணல் செயற்திட்டங்களை உள்ளிணைப்பது அல்லது தொடர்ந்தும் முன்னெடுப்பது தமது போட்டித்திறன் அனுகூலத்தை தக்கவைத்துக்கொள்வதற்கான வழிகளில் ஒன்றாக காணப்படுகின்றது.

இது தொடர்பான ஊடகவியலாளர் மாநாட்டில் COYLE இன் பணிப்பாளர் சபைத் தலைவரான தினுக் ஹெட்டியாராச்சி அவர்கள் கருத்து வெளியிடுகையில்,

 “எந்தவொரு நிறுவனத்தைப் பொறுத்தவரையிலும் அதன் பணியாளர்களே மகத்தான சொத்து என்பது சர்வதேசரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள ஒரு விடயமாகும். எல்லாவற்றை விடவும் முக்கியமான சொத்தான பணியாளர்களுடன் தொடர்புபட்டுள்ள ஆரோக்கியம் மற்றும் நலன் ஆகிய மூலங்களை நிறுவனத்தின் மூலோபாயத்தின் நடுநாயகமாகக் கொண்டிருக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. ஆரோக்கியமான மகிழ்ச்சிகரமான மற்றும் அர்ப்பணிப்புடனான ஈடுபாடு கொண்ட தொழிற்படையானது நிறுவனமொன்றின் வெற்றிக்கு எப்போதும் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. ஆகவே, ஊழியர்களின் ஆரோக்கியம் மற்றும் நலனை மேம்படுத்துவது சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் நிச்சயமாக பரஸ்பரம் வெற்றியளிக்கும் ஒன்றாக அமைந்துள்ளதுடன், அனைத்து நிறுவனங்களும் அடைந்துகொள்ள விரும்பும் ஒன்றாகவும் காணப்படுகின்றது” என்று குறிப்பிட்டார்.

JETRO Colombo இன் வதிவிட பிரதிநிதியான மசடோமா ஐடொனகா கருத்து வெளியிடுகையில்,

 “அண்மைய ஆண்டுகளில் சர்வதேச பொருளாதாரத்தின் உயர் போட்டியுடனான வர்த்தக நிலைமையானது இலங்கை ஊழியர்கள் பலரை வெளியகற்றியுள்ளது. எந்தவொரு திறமையான பணியாளர்களும் சிறந்த உடல் மற்றும் உள ஆரோக்கியம் அல்லாமல் தமது நிறுவனத்திற்கு மகத்தான பங்களிப்பினை வழங்க முடியாது என்பதை நாம் அறிவோம். 

ஆகவே, நிறுவனத்தின் பெறுபேற்றுத்திறன் மற்றும் அதன் ஊழியர்களின் ஆரோக்கிய மேலாண்மைக்கு முகாமைத்துவமும் மற்றும் அதிகாரிகளும் பொறுப்பு வகிக்க வேண்டும்ரூபவ்” என்று குறிப்பிட்டார்.

இலங்கை நிறுவன ஆரோக்கிய மற்றும் உற்பத்தித்திறன் விருதுகள் நிகழ்வில் பங்கேற்கும் அனைத்து நிறுவனங்களும் அவற்றின் ஊழியர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அதி பாரிய பாரிய, நடுத்தர மற்றும் சிறிய பிரிவு என வகைப்படுத்தப்படும்.

ஆரோக்கியம் மற்றும் உற்பத்தித்திறன் மேலாண்மை செயற்திட்டங்களுடன் மேலாண்மையைப் பொறுத்தவரையில் தமது ஊழியர்கள் மீது கவனம் செலுத்தியவாறு வெற்றிகரமான முயற்சிகளை முன்னெடுத்துள்ள மிகச் சிறந்த நிறுவனங்களுக்கு அவற்றின் பெறுபேறுகளுக்கான இனங்காணல் அங்கீகாரமாக இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. ISO மற்றும் PAS போன்ற சர்வதேச தரச் சான்று அங்கீகாரங்களால் பின்பற்றப்படுகின்ற ஐந்து முக்கியமான அம்சங்களின் அடிப்படையில் கருத்துக்கணிப்புக்கள் மற்றும் செமலமர்வுகளுடனான தெரிவு நடைமுறையின் மூலம் வெற்றிபெறும் நிறுவனங்கள் தெரிவு செய்யப்படவுள்ளன. மேலாண்மை அடிப்படை மற்றும் கொள்கைகளில் ஆரோக்கியம் மற்றும் உற்பத்தித்திறன் மேலாண்மையை நிலைப்படுத்தல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு கொண்ட மேலாண்மை மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்படும் ஏற்பாடுகள், ஆரோக்கியம் மற்றும் உற்பத்தித்திறன் மேலாண்மையை மதிப்பீடு செய்து மேம்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்குமுறைகள் மற்றும் இடர் முகாமைத்துவத்திற்கான இணக்கப்பாடு போன்றவை தெரிவு நடைமுறையில் அடங்கியுள்ளன.

1999 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட COYLE, விசாலமான தேசிய மற்றும் சர்வதேச வர்த்தக வலையமைப்பின் கீழ் வர்த்தக உரிமையாளர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களை உள்ளடக்கியவாறு 120 உச்ச இலங்கை இளம் தொழில் முயற்சியாளர்களைக் கொண்ட ஒரு வர்த்தக சம்மேளனமாகும். அரசாங்க அதிகாரிகள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் சமூக ஸ்தாபனங்களுடன் ஒன்றிணைந்து செயற்படும் COYLE அங்கத்தவர்கள் “மேன்மையின் மூலமாக அங்கீகாரம்” (Recognition through Excellence) என்ற தாரக மந்திரத்துடன் வர்த்தகங்கள் மற்றும் சமூகத்தைக் கட்டியெழுப்பும் இலக்குடன் சமூகத்திற்கும் தமக்கிடையிலும் உதவி வருகின்றனர்.

ஜப்பான் மற்றும் உலகின் ஏனைய நாடுகளுக்கிடையில் பரஸ்பர வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பதில் பணியாற்றி வருகின்ற ஒரு அரசாங்கம் சார்ந்த ஸ்தாபனமே JETRO.. வெளிநாடுகளுக்கான ஜப்பானிய ஏற்றுமதிகளை ஊக்குவிப்பதற்காக 1958 ஆம் ஆண்டு இது ஆரம்பத்தில் ஸ்தாபிக்கப்பட்டதுடன் 21 ஆம் நூற்றாண்டில் JETRO இன் பிரதான இலக்கு ஜப்பானில் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஊக்குவிப்பதுடன் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஜப்பானிய நிறுவனங்கள் தமது சர்வதேச ஏற்றுமதி வாய்ப்புக்களை உச்சப்படுத்துவதற்கு உதவுவதை நோக்கி திசைதிரும்பியுள்ளது.