சு.க.வின் தீர்­மா­னம் இன்று

Published By: Vishnu

08 Aug, 2018 | 09:06 AM
image

மாகா­ண­ சபைத் தேர்தல் தொடர்­பான ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் நிலைப்­பாடு  இன்று தெரி­ய­வரும்.அது ­தொ­டர்­பான தீர்­மானம்  ஜனா­தி­பதி தலை­மையில் கூட­வுள்ள கட்­சியின் மத்­திய செயற்­கு­ழுவில்  மேற்­கொள்­ளப்­படும் என ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி இளைஞர் முன்­ன­ணியின் தலை­வரும் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சாந்த பண்­டார தெரி­வித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி தலை­மை­ய­கத்தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு  குறிப்­பிட்டார். 

அவர் தொடர்ந்தும் கூறு­கையில்,

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி சற்று பின்­ன­டைவை சந்­திக்­க­ நே­ரிட்­டது. அதன் விளை­வாக கட்சி மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கை­களை கிராம மட்­டத்தில் மேற்­கொள்­வதில் பாரிய சவா­லாக இருக்கும் என்றே நாங்கள் எண்­ணி­யி­ருந்தோம்.என்­றாலும் கிராம மட்­டத்தில் நாங்கள் மேற்­கொண்ட கட்சி மறு­சீ­ர­மைப்பு வேலைத்­திட்­டங்­க­ளின்­போது கட்சி ஆத­ர­வா­ளர்கள் தொடர்ந்தும் கட்­சி­யுடன் இருப்­பதை காண­மு­டிந்­தது. கட்­சியை பலப்­ப­டுத்­து­வ­தற்கு அவர்கள் மிகவும் ஆர்­வ­மாக செயற்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றனர்.

அதனால் கட்­சியின் மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கைகள் மற்றும் கட்­சியின் தொகுதி அமைப்­பா­ளர்கள் நிய­மனம் போன்ற நட­வ­டிக்­கைகள் மிக­வி­ரைவில் மேற்­கொள்­ள­வேண்­டி­யி­ருப்­ப­துடன் கட்சி அர­சியல் தொடர்­பாக அண்­மைக்­கா­ல­மாக மேற்­கொள்­ளப்­படும் விமர்­ச­னங்கள் தொடர்­பா­கவும் அடுத்­து வரும் மாகா­ண­ சபைத் தேர்­தலில் கட்சி எவ்­வாறு போட்­டி­யி­டு­வது போன்ற விட­யங்­க­ளுக்கும் தீர்­வு­கா­ண­வேண்­டி­யி­ருக்­கின்­றது. குறிப்­பாக மாகா­ண­சபைத் தேர்தல்  விட­யத்தில்  புதிய தேர்தல் திருத்த முறைமைக்கு செல்­வதா அல்­லது பழைய முறைமைக்கு செல்­வதா என்ற நிலைப்­பாட்டில் கட்சி ஒரு தீர்க்­க­மான முடி­வொன்­றுக்கு வர­வேண்டும். 

மாகா­ண ­சபைத் தேர்தல் முறை­மையில் கட்சி உறுப்­பி­னர்­களில் ஒரு­சிலர் புதிய தேர்தல் திருத்­தத்­துக்கு அமைய தேர்தல் நடத்­தப்­ப­ட­வேண்டும் என்றும் சிலர் பழைய முறை­யிலேயே நடத்­தப்­ப­ட­வேண்டும் என்றும் தெரி­வித்து வரு­கின்­றனர். அதனால் இவ்­வா­றான நிலையில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி மாகா­ண ­சபைத் தேர்தல் தொடர்பில் தனது தீர்க்­க­மான நிலைப்­பாட்டை எடுப்பதற்காக இன்று மாலை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மத்திய செயற்குழு ஜனாதிபதியின் தலைமையில்  அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில்  கூடவுள்ளது. இதன்போது தேர்தல் குறித்து கட்சியின் இறுதித் தீர்மானம் மேற்கொள் ளப்படும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04