பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் நீதி­மன்றை அவ­ம­தித்­த­தாக கூறி, அவ­ருக்கு எதி­ராக தாக்கல் செய்­யப்­பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று மேன் முறை­யீட்டு நீதி­மன்­றினால் அறி­விக்­கப்­ப­ட­வுள்­ளது. 

மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் தலைமை நீதி­பதி பிரீத்தி பத்மன் சூர­சேன, அர்­ஜுன ஒபே­சே­கர ஆகியோர் முன்­னி­லையில் இந்த  தீர்ப்பு இன்று வழங்­கப்­ப­ட­வுள்­ளது.

இந் நிலையில் நேற்று திடீ­ரென சுக­வீ­ன­முற்ற பொது பலசேனா செய­லாளர் கல­கொட அத்தே ஞா­ன­சார தேரர், ஸ்ரீ ஜய­வர்­தனபுர வைத்­தி­ய­சா­லையில் சிகிச்­சை­க­ளுக்­காக அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார்.

கல­கொட அத்தே ஞானசார தேர­ருக்கு இதற்கு முன்னர் சிறு­நீ­ரகப் பிரச்­சினை கார­ண­மாக இரு முறை சத்­திர சிகிச்சை செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் அது தொடர்பில்  ஏற்­பட்ட சுக­வீன நிலையைக் கருத்தில் கொண்டே அவர் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்பட்­ட­தா­கவும்  பொது பலசேனா அமைப்பு தெரி­வித்­தது.    நேற்று ஞான­சார தேர­ருக்கு வைத்­தி­ய­சா­லையில் பல பரி­சோ­த­னைகள்  முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள நிலையில் இன்று சத்­திர சிகிச்­சை­யொன்­றுக்கு உட்­ப­டுத்­தப்­ப­டலாம் என  வைத்­தி­ய­சாலை தகவல்கள் தெரி­வித்­தன.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 25 ஆம் திகதி ஹோமா­கம நீதிவான் நீதி­மன்றில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­னெ­லி­கொட காணாமல் ஆக்­கப்­பட்­டமை தொடர்­பி­லான வழக்கு விசா­ர­ணை­களின் இடைநடுவே கலகம் ஏற்­ப­டுத்தும் வண்ணம் நடந்­து­கொண்டு நீதி­மன்றை அவ­ம­தித்­த­தாக அப்­போது ஹோமா­கம பிர­தான நீதி­வானும் தற்­போ­தைய கொழும்பு பிர­தான நீதி­வா­னு­மா­கிய ரங்க திஸா­நா­யக்க ஊடாக  ஞான­சார தேர­ருக்கு எதி­ராக மேன்முறை­யீட்டு நீதி­மன்றில் முறை­யி­டப்பட்­டி­ருந்­தது.

இது தொடர்பில்  நீன்ட விசா­ர­ணைகள் இடம்­பெற்று வந்த நிலையில் முறைப்­பாட்­டாளர் தரப்பு, பிர­தி­வாதி தரப்பு, சாட்சி விசா­ர­ணை­களும் தொகுப்­பு­ரை­களும் நிறை­வ­டைந்­துள்ள நிலை­யி­லேயே தீர்ப்பு இன்று அறி­விக்­கப்­படவுள்­ளமை குறிப்பிடத்தக்கது.