ஒரே ஒருமுறை இப்போதாவது அப்பா என அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே என தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் தனது தந்தையான கலைஞருக்கு உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார்.

காவேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தி.மு.க தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார். இதனை அடுத்து, ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கருணாநிதியின் உடல் காவேரி வைத்தியசாலையில் இருந்து அம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. 

இதற்கிடையே, தி.மு.க தலைவர் கருணாநிதியை ஸ்டாலின் பெரும்பாலும் தலைவர் என அழைப்பது வழக்கம். இந்நிலையில், ஒரே ஒருமுறை இப்போதாவது அப்பா என அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கண்ணீருடன் உருக்கமாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்