(எஸ்.ரவிசான்)

முன்னைய அரசாங்கத்தின் கீழ் வழங்கப்பட்டது போன்று உர மூடையொன்றுக்கு  350 ஷரூபாய் நிவாரண விலையினை வழங்குதல், நெல்லுக்கான உத்தரவாத விலையை நிர்ணயித்தல்  ஆகிய பிரதான காரணங்கள் இரண்டை வலியுறுத்தி அனைத்து இலங்கை  விவசாய சம்மேளனம் இன்றைய தினம் அநூரதபுரத்தில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை முன்னெடுத்தது. 

இதன் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசே உரத்திற்கான நிவாரண விலையினை 350 ரூபாவாக மாற்று, நெலலுக்கான உத்தரவிலையினை துரிதமாக அமுல்படுத்து, விவசாயிகளை ஏமாற்றுவதா நல்லாட்சியின் செயற்பாடு, விவசாயிகளின் உரிமைகளை பறிக்காதே உள்ளிட்ட சில காரணங்களை முன்னிலைப்படுத்தி ஆர்ப்பாட்ட பேரணியினை முன்னெடுத்தனர்.

காலை 11 மணியளிவில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த ஆர்ப்பாட்ட பேரணியானது அநுராதப்புரம் நகரில் அமைந்நதுள்ள டி.எஸ். சுற்றுவட்டத்தினூடாக விவசாய அமைச்சர் துமிந்த திசாநாயக்கவின் வீட்டை வந்தடைந்ததோடு பின்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகள் 1000 இற்கும் மேற்பட்டோர் அமைச்சரின் வீ;ட்டின் முன்பாக கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.