மறைந்த கருணாநிதியின் உடலுக்கு, அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் நாளை சென்னைக்கு செல்லவுள்ளனர்.

கருணாநிதியின் மறைவினை அடுத்து, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த நாட்டின் அரசியல் கட்சி தலைவர்கள் நாளை சென்னை செல்கின்றனர்.

பிரதமர் மோடி இன்றே வைத்தியசாலைக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.. இந்நிலையில் கருணாநிதி மறைந்ததால், அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த நாளை பிரதமர் மோடி செல்கிறார்.

அதேபோல காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி, ஏற்கனவே கருணாநிதியை வைத்தியசாலையில் நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்து விட்டு சென்றார். 

இந்நிலையில் நாளை ராகுல்காந்தி சென்னை வந்து கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளார். அதேபோல, காங்கிரஸ் மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் ஆகியோரும் நாளை சென்னை செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உள்ளிட்ட பல்வேறு மாநில தலைவர்களும் நாளை கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த உள்ளனர். இந்திய அரசியல் தலைவர்கள் சென்னை செல்லவுள்ளதால் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகினற்ன.