(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என கட்சி தலைவர் அனைவரும் இணக்கம் தெரிவித்தனர். யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல சபையில் தெரிவித்ததையடுத்து சபையில் சர்ச்சை ஏற்பட்டது.

இதன்போது அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல கூறும் போது,

பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் அதிகரிப்பதனை ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற குழு  நிராகரித்தது. இதனை இந்த சபையில் முன்வைக்கின்றேன். அத்துடன் கட்சித் தலைவர் கூட்டத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் சம்பள அதிகரிப்புக்கு ஆதரவு தெரிவித்தனர் என்றார்.

இதன்போது கூட்டு எதிர்க்கட்சியினர் அனைவரும் எதிராக கோஷமிட்டு எதிர்ப்பு வெளியிட்டதையடுத்து, உங்களுக்கு சம்பள அதிகரிப்பு தேவையில்லையா? தேவையில்லையா? என அமைச்சர் லகஷ்மன் கிரியெல்ல கூட்டு எதிரணியை பார்த்து கேட்டார். அதற்கு கூட்டு எதிர்க் கட்சியினர் எமக்கு தேவையில்லை. தேவையில்லை என கோஷமிட்டனர்.