தி.மு.க தலைவர் கருணாநிதி உடல் நாளை ராஜாஜி மண்டபத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

உடல் நலக்குறைவால் காவேரி வைத்தியசாலையில், கடந்த 11 நாட்கள் சிகிச்சை பெற்ற கருணாநிதி இன்று ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி, மாலை 6.10 மணிக்கு காலமானார்.

இந்நிலையில் இன்று இரவு அவர் உடல் கோபாலபுரம் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது. அத்தோடு அவரின் உடல் நாளை காலை ராஜாஜி மண்டபத்தில் பொது மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லட்சக்கணக்கான பொதுமக்களும், திமுக தொண்டர்களும், கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல தேசிய தலைவர்கள் நாளை கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.