தி.மு.க. தலைவர் மு. கருணாநிதியின் மறைவையடுத்து தமிழகம் முழுவதிலும் 7 நாட்கள் துக்க தினம் அனுஷ்டிக்கப்படுமென தமிழக அரசு அறிவித்துள்ளது.

காவேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை காலமானார். 

இதனை அடுத்து, நாளை தமிழகம் முழுவதும் பொதுவிடுமுறை அறிவித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும், 7 நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. 

புதுவையிலும் நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு 3 நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் புதுவை முதல்வர் தெரிவித்துள்ளார்.