தி.மு.க தலைவர் கருணாநிதி சற்று முன் காலமானதைத் தொடர்ந்து அவரது கோபாலபுரம் வீட்டில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

தி.மு.க தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் மறைந்தார். காவேரி வைத்தியசாலையில் 11 தினங்கள் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைக்குப் பிறகு இன்று சிகிச்சை பலனின்றி கருணாநிதி மறைந்தார். 

இதைத்தொடர்ந்து அவரது உடல் அவர் வாழ்ந்த கோபாலபுரம் வீட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனை முன்னிட்டு கருணாநிதியின் சென்னை கோபாலபுரம் வீட்டில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 

அதிக வெளிச்சம் கொண்ட விளக்குகள் கோபாலபுரம் வீட்டின் அருகே கட்டப்பட்டு வருகின்றன. அவரது வீட்டிற்கு இரும்பு நாற்காலிகள் கொண்டு வரப்படுகின்றன. கருணாநிதியின் கார் ஏற்கனவே அகற்றப்பட்டு விட்டது. இந்நிலையில் வீட்டில் இருந்த பொருட்களும் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

மேலதிக செய்திகளுக்கு

கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடம் : நிலவரம் என்ன ? சற்றுநேரத்தில் வெளிவரும் !

ஆபத்தான நிலையில் கருணாநிதி ; வெளியானது புதிய அறிக்கை

6 மணி முதல் மதுபான கடைகளுக்கு பூட்டு

கொட்டுகிறது மழை; அசய மறுக்கின்றனர் தொண்டர்கள் !!!

காவேரியில் இருந்து கதறியழுதபடி புறப்பட்ட கருணாநிதி குடும்பத்தினர்

மறைந்தார் கலைஞர் கருணாநிதி