(கலைச்செல்வன்)

கடவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டில் காயமடைந்த பெண் உயிரிழந்துள்ளார்.

குறித்த துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த 34 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.

கடவத்த கொனஹென பிரதேசத்தில் இன்று முற்பகல் குறித்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றது.

இதில் காயமடைந்த குறித்த பெண் றாகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.