(ICTA) “Disrupt Asia 2018” - வர்த்தக ஆரம்ப முயற்சி சார்ந்த சர்வதேச வல்லுனர்கள் 

Published By: Priyatharshan

07 Aug, 2018 | 04:12 PM
image

அமெரிக்கா,நெதர்லாந்து, ஐக்கிய இராச்சியம், சிங்கப்பூர், பங்களாதேஷ் ,பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து கலந்துகொள்ளும் பிரமுகர்கள் வர்த்தக ஆரம்ப முயற்சி தொடர்பான தமது அனுபவங்கள் மற்றும் உள்ளார்ந்த விடங்களை பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.

இலங்கையில் ஆரம்ப வர்த்தக முயற்சிகளுக்கான முன்னணி மாநாடு மற்றும் புத்தாக்கத் திருவிழா நிகழ்வான Disrupt Asia 2018 ஆனது 2018 ஆகஸ்ட் 11 ஆம் திகதி பி.ப 3.30 மணி முதல் நள்ளிரவு வரை மருதானை Trace - Expert City இல் இடம் பெறவுள்ளதுடன்  தொழில்முயற்சியாண்மை, கொள்கை ,புத்தாக்கம் மற்றும் ஆரம் வர்த்தக முயற்சிகள் சார்ந்த பல பிரபல சர்வதேச மற்றும் உள்நாட்டு நிபுணர்களின் உரைகள் இடம்பெறவுள்ளன.

கொள்கை மற்றும் மூலோபாயம் ஆகியவற்றிற்கான தேவை தொடர்பில் இம் மாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ளதுடன் வர்த்தக முயற்சிகளில் காலடியெடுத்து வைக்க விரும்புகின்றவர்களுக்கு உந்துசக்தியளிக்கும் வகையில் தொழில் முயற்சியாளர்கள் தமது வெற்றிகள் மற்றும் தோல்விகள் தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவுள்ளனர். 

அமெரிக்கா, நெதர்லாந்து, ஐக்கிய இராச்சியம் சிங்கப்பூர், பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து கலந்து கொள்ளவுள்ள வல்லுனர்கள் செயற்கை நுண்ணாய்வு (AI), டிஜிட்டல் சந்தைப்படுத்தல் பாதுகாப்பு ஆகிய துறைகளில் தமது அறிவைப் பகிர்ந்து கொள்ளவுள்ளதுடன்  STEAM கல்வி, படைப்பாக்கத்திறன் மிக்க தொழிற்துறைகள் மற்றும் சமூக தொழில் முயற்சியாண்மை தொடர்பில் அதிரடியான சிந்தனைகளை வெளிக்கொணருவதற்கான களத்தினை ஏற்படுத்தவுள்ளனர்.  இம்மாநாட்டிற்கான பிரவேசப் பத்திரங்களை https://disruptasia.today/buytickets/ மூலமாக கொள்வனவு செய்ய முடியும். 

நிகழ்வின் பிரதான தொடக்கவுரையை XLr8 Andhra Pradesh Technology Business Accelerator (University of Texas at  Austin extension) இன் முகாமைத்துவப் பணிப்பாளரான கிளென் ரொபின்சன் அவர்கள் ஆற்றவுள்ளார். Policy: Will It Change Anything?" என்ற தலைப்பில் இடம்பெறும் குழுநிலை கலந்துரையாடலிலும் அவர் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வார்.

இலாப நோக்கற்ற துறையில் பல்வேறு அதிகார முகாமைத்துவ பதவிகளை கிளென் ரொபின்சன் அவர்கள் வகித்துள்ளதுடன் அனுபவம் மிக்க தொழில் முயற்சியாளரான அவர் பல்வேறுபட்ட ஆரம்ப வர்த்தக முயற்சிகளை வெற்றிகரமாக ஆரம்பித்து நிர்வகித்துள்ளார்.

ஆந்திர பிரதேச அரசு மற்றும் இந்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனங்களின் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து XLr8 Andhra Pradesh Technology Business Accelerator இன் தொழிற்பாடுகளை அவர் இயக்கி வருவதுடன் ,சிலி நாட்டு அரசாங்கம் மற்றும் ஐக்கிய அமெரிக்க பல்தேசிய நிறுவனங்களுடன் இணைந்து, சிலியில் பொருளாதார அபிவிருத்திச் செயற்திட்டமொன்றை வெற்றிகரமாக இயக்கி நடைமுறைப்படுத்தியுள்ளார். 

வாஷிங்டன் தேசிய விஞ்ஞான நிறுவகத்தின் ஆலோசகராகவும் அவர் செயற்படுவதுடன், பல்வேறு தொழில்நுட்ப வர்த்தக காப்பகங்கள், ஆரம்ப வர்த்தக முயற்சிகள் மற்றும் இலாப நோக்கற்ற ஸ்தாபனங்களில் பணிப்பாளர் சபை உறுப்பினர்,  வழிகாட்டி மற்றும் ஆலோசகர் பதவி நிலைகளை வகித்துள்ளார்.

“Disrupting Creative Industries” என்ற தலைப்பில் இடம்பெறும் குழுநிலை கலந்துரையாடலில் பிரதீபா ஜீவா அவர்கள் பங்குபற்றவுள்ளார். தயாரிப்பாளரும் சமூக தொழில் முயற்சியாளருமான ஜீவா அவர்கள் Jeeva Productions Inc இன் பிரதம நிறைவேற்று அதிகாரியும் Snake Nation இன் உள்ளடக்க மூலோபாயத்திற்கான தலைமை அதிகாரியும் ஆவார். bedsider.org மற்றும் thetruth.com ஆகியவற்றிற்காக வெற்றிகரமான டிஜிட்டல் பிரச்சாரங்களை ஆரம்பித்து வைத்த அவர் அந்த இரு  பிரச்சாரங்களின் மூலமாகவும் 3 மில்லியன் தனித்துவமான பார்வையாளர்களை ரூடவ்ர்த்துள்ளார். 

“Hollywood’s New Leaders: 2016” இன் கீழ் Variety இன் மதிப்புமிக்க 40 பேரில் ஒருவராகவும் அவர் பெயரிடப்பட்டுள்ளதுடன் Machinima Inc. 

இல் அவர் அபிவிருத்திக்கான தலைமை அதிகாரியாக பணியாற்றிய சமயத்தில் “One of the 26 Asian Americans to watch out for in 2017” என்ற சிறப்பையும் NBC Universal மூலமாக பெயரிடப்பட்டு அடையப்பெற்றுள்ளார்.

YGAP Bangladesh இன் உள்நாட்டுத் தலைமை அதிகாரியான நிர்ஜோர் ரஹ்மான் அவர்கள் “Success in Failure”என்ற தலைப்பில் உரையாடவுள்ள குழுவில் ஒருவராக இடம்பிடித்துள்ளார்.

 கல்வி அடிப்படையிலான சமூக தொழில் முயற்சியான Light of Hope மற்றும் அவசர வேளைகளில் முதலில் உதவும் தன்னார்வ வலையமைப்பான  CriticaLink போன்ற ஆரம்ப வர்த்தக முயற்சிகளுக்கு YGAP  ஆதரவளித்துள்ளது. 

புத்தாக்க மூலோபாயங்கள் மற்றும் பங்குடமை முறைமைகளை வடிவமைத்து அவற்றை முன்னெடுத்தல் தொழில் முயற்சியாளர்கள்,ஆரம்ப வர்த்தக முயற்சிகள், அரச சார்பற்ற அமைப்புக்கள், பல்தேசிய நிறுவனங்கள் மற்றும் அரசியல்தலைவர்களுடன் இணைந்து பணியாற்றுதல் போன்றவற்றில் நிர்ஜோர் அவர்கள் சிறப்புத் தேர்ச்சி பெற்றுள்ளார். ஐக்கிய இராச்சியத்தைத் தளமாகக் கொண்ட ஒரு அரச சார்பற்ற அமைப்பான Water and Sanitation for the Urban Poor (WSUP)இன் கீழ் பங்காளாதேஷ் நகரப் புறங்களில் புதிய சுகாதார தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தி முன்மாதிரி செயற்திட்டத்தை முன்னெடுத்து அதனை வர்த்தகமயப்படுத்தும் 4 மில்லியன் டொலர் தொகையுடனான Gates Foundation செயற்திட்டத்திற்கு பங்களாதேஷில் அவர் தலைமை வகித்துள்ளார்.

Techstars India வின் முகாமைத்துவப் பணிப்பாளரான ரே நியூவல் மற்றும் DeInvesteerdersClub இன் பணிப்பாளர் சபைத்தலைவரும்,முகாமைத்துவப் பங்காளருமான கீத் வோலஸ் ஆகியோர் “Raising A Million Dollars”என்ற தலைப்பில் பங்குபற்றவுள்ளவர்களுடன் இடைத்தொடர்பாடும் கலந்துரையாடலொன்றை முன்னெடுக்கவுள்ளனர். சர்வதேசரீதியாக முன்மாதிரியாகத் திகழும் ஒரு தொழில் முயற்சியாளரான ரே நியூவல் அவர்கள் DoubleClick, MSN,மற்றும் Yahoo ஆகிய நிறுவனங்களில் விற்பனைத்துறையில் தலைமைப் பதவிகளை வகித்து தனது அனுபவத்தைப் பெற்றுக்கொண்டு தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்து, ஆரம்ப கட்ட தொழில்நுட்ப முதலீட்டாளராக செயற்பட்டு, ஒரு தொழில் முயற்சியாளராக மாறுவதற்கு தீர்மானித்திருந்தார். 

பிரபலமான அடிப்படை தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்ட கைத்தொலைபேசிகளில் இயங்கும் ஸ்ட்ரீமிங் ஊடக பயன்பாடுகளினூடாக (streaming media applications) இந்தியா மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் இணையத்தில் புதிய இணைய பாவனையாளர்களை ஒன்றுதிரட்டுவதில் பிரத்தியேகமாக தொழிற்பட்ட து Jigsee என்ற ஆரம்ப வர்த்தக முயற்சியை 2008 ஆம் ஆண்டில் அவர் ஆரம்பித்திருந்தார். இந்நிறுவனத்திலிருந்து 2015 ஆம் ஆண்டில் விலகிய ரே அவர்கள் உலகெங்கிலும் ஸ்தாபகர்கள் மத்தியில் ஆலோசனைரூபவ் வழிகாட்டல் மற்றும் முதலீடு போன்றவற்றை முன்னெடுத்து வருகின்றார். தொழில்முயற்சியாளர்கள் மற்றும் வர்த்தக ஒப்பந்தங்களில் தீவிர ஆர்வம் கொண்ட ஸ்கொட்லாந்து நாட்டவரான கீத் வோலஸ் அவர்கள் நெதர்லாந்து மற்றும் அதற்கு வெளியில் கூட்டு முதலீடுகளில் கவனம் செலுத்தியவாறு Dutch Investors Club (DeInvesteerdersClub) இனை ஸ்தாபித்துள்ளார். Hivos Foundation உடன் இணைந்து பணியாற்றும் அவர், Hivos Impact Investments இனை ஸ்தாபித்த அணியில் அங்கம் வகித்துள்ளதுடன்,முதலீட்டு அணியிலும் அங்கம் வகித்து வருகின்றார். Hivos Food and Lifestyle Fund (தெற்கு ஆபிரிக்கா) மற்றும் the Hivos Mideast Creatives Fund   (மத்தியகிழக்கு வடக்குஆபிரிக்கா) துறை சார் நிறுவனங்களையும் நிர்வகித்து வருகின்றார். 100 இற்கும் மேற்பட்ட நாடுகளில் இடம்பெறும் ஒரு சர்வதேச தொழில்முயற்சியாளர் போட்டியான “Get In The Ring”இன் Global Ringmaster ஆகவும் கீத் அவர்கள் திகழ்கின்றார். இம்மாநாட்டிற்கு இணையாக இடம்பெறும்“Angel Investment for Beginners”அமர்வின் கலந்துரையாடல் குழுவிலும் அவர் இடம்பெற்றுள்ளார்.

பிரதான நிறைவுரையை TangoTab  இல் சமூக மாற்றத்திற்கான பணிப்பாளரான நிக் மரினோ ஜுனியர் அவர்கள் ஆற்றவுள்ளார். 

பயனர் ஒருவர் ஒவ்வொரு தடவை உணவகம் ஒன்றினுள் செல்லும் போது பயன்பாட்டில் (app) உணவகங்களை கண்டறிய உதவும் ஒரு மொபைல் பயன்பாடான (mobile app) Tango Tab  பசிப்பவர்களுக்கு உணவளிக்கின்றது. 

தற்போது 100,000 உணவகங்களில் TangoTab உபயோகம் கிடைக்கப்பெறுவதுடன், 2.5 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு உணவளித்துள்ளது. MISSIOND இன் ஸ்தாபகரான நிக் அவர்கள் சேவைத் தொழிற்துறைக்கான ஒரு புதிய appஆன Live With Purpose clothing line and Regly இனை முன்னெடுத்து வருகின்றார். Revolving Mind Media இன் இணை ஸ்தாபகரான அவர் 2018 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தனது முதலாவது உணவகமான

SubMarino’s இனை ஆரம்பிக்கவுள்ளார். தனது கன்னி நூலான “Living With Purpose”என்ற புத்தகத்தையும் நிக் அவர்கள் நிறைவு செய்யவுள்ளதுடன், 2018 ஆம் ஆண்டின் முடிவில் வெளியிட்டு வைக்கவுள்ளார். 2016 ஆம் ஆண்டில் “Top Texans under the age of 30” இல் ஒருவராகவும் நிக் பெயரிடப்பட்டிருந்தார்.

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் அமைப்பினால் (ICTA) Disrupt Asia 2018 நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் தொலைதொடர்பாடல் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் அமைச்சு இதற்கு ஆதரவு வழங்குகின்றது.

சர்வதேச பங்காளராக IKT Norge,அறிவுப் பங்காளராக Pricewaterhousecoopers (PWC), ஆதரவுப் பங்காளர்களாக GIZ Sri Lanka, Payoneer, techStars  மற்றும் மருதானை Trace – Expert City,கொடுப்பனவுப் பங்காளராக PayHere, தன்னார்வப் பங்காளராக GudPpl,தொழில்நுட்பத்துறை பங்காளராக SLASSCOM> Makerspace பங்காளராக Igniter Space> YouTube பங்காளராக IdeaHell, உள்வாங்கல் பங்காளராக LIRNEasia, சமூக புத்தாக்கப் பங்காளராக UNDP Sri Lanka,படைப்பாக்க கூடார பங்களாராக Gamer.LK மற்றும் ஏற்பாட்டுப் பங்காளர்களாக Calcey Technologies, Orange Electric, WSO2 மற்றும் CodeGenஆகிய நிறுவனங்கள் செயற்படுகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58