(இரோஷா வேலு)

வாழைத்தோட்ட பகுதியின் பிரபல போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர் திட்டமிட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இரவு வாழைத்தோட்ட செக்குவத்த பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இச்சம்பவத்தின் போது பண்டாரநாயக்க மாவத்தை கொழும்பு 12ஐச் சேர்ந்த 55 வயதுடைய மொஹமட் மொஹைதீன் மொஹமட் பெளமி என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரை கைதுசெய்த வேளையில் சந்தேகநபரிடமிருந்து யாபா எனப்படும் போதை மாத்திரைகள் 175 மீட்கப்பட்டுள்ளன.  

இவர் இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் போதைப்பொருள் வர்ததகம் தொடர்பாக குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் திட்டமிட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் அவரை அளுத்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளனர்.