(க.கமலநாதன்)

கேகாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் இரும்பொன்றினால் தாக்கப்பட்டு மாற்றுத்திரனாளியான பெண்ணொருவர்  கொலை செய்யப்பட்டுள்ளார். 

சகோதரனின் தாக்குதலுக்கு இலக்கான நிலையிலேயே குறித்த பெண் உயிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

119 இலக்க வாயிலான கேகாலை பொலிஸ் நிலையத்திற்கு  கிடைக்கப்பெற்ற அவசர அழைப்பொன்றின் பேரில் தியகம பிரதேசத்தில் இரும்பொன்றினால் தாக்கப்பட்டு உயிரிழந்திருந்த குறித்த பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

49 வயதுடைய வயலட் நோனா என்ற அழைக்கப்படும் மாற்றுதிறனாலியான பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவரின் சகோதரனினால் இரும்பொன்றினால் கடுமையாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சந்தேக நபர் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில் பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கேகாலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.