மட்டக்களப்பு வாழைச்சேனை  தியாவட்டவான் ஆற்றங்கரையோரம் இனம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் இன்று காலை கரையொதுங்கியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கறுப்பு நிற காற்சட்டையும் கறுப்பு நிற ரீசேட்டும் கறுப்பு

நிற கெங்பூட் பாதணியும் அணிந்த நிலையில் சடலம் காணப்படுள்ளதாக தெரிவித்தனர்.

குறித்த சடலம் தொடர்பாக இது வரை இனம் காணப்படவில்லையெனவும் மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.