மடுமாதாவின் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

Published By: Digital Desk 4

07 Aug, 2018 | 02:17 PM
image

நானூறு வருடங்கள் பழைமையான வரலாற்று சிறப்புமிக்க மடுமாதா ஆலயத்தின் ஆவணி மாதத் திருவிழா திங்கட்கிழமை 6 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. 

இம்மாதம் 15 ஆம் திகதி மடுமாதா திருவிழா பக்தி உணர்வு மேலிட நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக மடு ஆலய பரிபாலகர் அருட்தந்தை எமிலியானுஸ்பிள்ளை தெரிவித்தார். 

போர்க்காலத்தில் 35 ஆயிரம் மக்களுக்கு பாதுகாப்பு அடைக்கலம் அளித்த மடு அன்னை சமாதானத்தின் அடையாளமாக, இன நல்லிணக்கத்தின் குறியீடாகத் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

மடு பிரதேசம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் கூட இறுக்கமான பாதுகாப்பு சூழலுக்குள் நாட்டின் பல பகுதிகளையும் சேர்ந்த கத்தோலிக்க பக்தர்கள் மடு மாதாவின் ஆவணி மாதத் திருவிழாவில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது. 

இருப்பினும் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது மடு பிரதேசத்தில் இராணுவம் விடுதலைப்புலிகளுக்கு எதிராக மேற்கொண்ட தாக்குதலின் போது மடு தேவாலயமும் எறிகணைத் தாக்குதலுக்கு உள்ளாகி அப்பகுதியில் தஞ்சமடைந்த பலர் கொல்லப்பட்டனர். பெரும் எண்ணிக்கையில் அங்கு தஞ்சமடைந்திருந்த இடம்பெயர்ந்த மக்களில் பலர் படுகாயங்களுக்கு உள்ளாகினார்கள். 

இறுதி நேரம் வரையில் இடம்பெயர்ந்த மக்களுக்கு அபயமளித்து அடைக்கலம் வழங்கிய மடு அன்னையும் தீவிரமடைந்த யுத்த மோதல்கள் காரணமாக பாதுகாப்புக்காக இடம்பெயர நேர்ந்தது.

அந்தநேரம் பாதுகாப்பை முன்னிட்டு மடு அன்னையின் சொரூபத்தை வடமேற்குக் கரையோரக் கிராமமாக்கிய தேவன்பிட்டி பகுதிக்குக் கொண்டு செல்ல நேர்ந்ததாக அந்த வேளையில் மடு பரிபாலகாராகப் பணியாற்றிய அருட்தந்தை எமிலியானுஸ்பிள்ளை தெரிவித்தார்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் மடு அன்னையின் திருச்சொரூபம் மீண்டும் மடு ஆலயத்திற்குக் கொண்டு வரப்பட்டு பிரதிஸ்டை செய்யப்பட்டு, மடு மாதா ஆலயம் சிறப்புற செயற்படத் தொடங்கியது. 

யுத்தத்தின் பின்னர் பெரும் எண்ணிக்கையான கத்தோலிக்கர்கள் மற்றும் இந்து சமய மக்களும் மடுமாதாவின் ஆவணி மாதத் திருவிழாவில் கலந்து கொண்டு அன்னையின் அருளைப் பெறுவதாகவும் அவர் கூறினார். 

அடர்ந்த காட்டுப்பகுதியில் அமைந்துள்ள போதிலும், பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆவணி திருவிழாவின்போது 9 நாட்களும் ஆலயத்தில் கூடித் தங்கியிருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார். அக்காலப்பகுதியில் பாம்பு போன்ற விஷம் தோய்ந்த உயிரினங்களினாலோ அல்லது வன விலங்குகளினாலோ பக்தர்கள் எவரும் இதுவரையில் பாதிக்கப்பட்டதில்லை என்பது அன்னையின் அருளுக்கு அடையாளமாகக் கருதப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இத்தகைய சிறப்பு மிக்க மடு மாதாவின் ஆவணி மாதத் திருவிழாவின் கொடியேற்ற வைபவத்தில் அருட்தந்தை எமிலியானுஸ்பிள்ளையிடம் இருந்து மடு பரிபாலகர் பொறுப்பை ஏற்கவுள்ள அருட்தந்தை பெப்பிசோசை உள்ளிட்ட அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் மற்றும் பெருமளவான பக்தர்களும் கலந்து கொண்டனர். மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மடு பிரதேச செயலாளர் உள்ளிட்ட முக்கிய அரச அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44