இந்தியாவில் இருந்து 27 இலங்கை அகதிகள் விமானம் மூலம் இன்று நாடு திரும்பியுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

கடந்த யுத்த காலத்தில் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு  அகதிகளாக சென்ற 27 பேரே இவ்வாறு இன்று நாடு திரும்பியுள்ளனர்.

குறித்த 27 பேரும் 3 விமானங்கள் மூலம் இன்று கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தனர்.

இவ்வாறு இலங்கை வந்த அகதிகளிடம் குடிவரவு மற்றும் குடியல்வு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டதுடன்  மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.