முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பில் இதுவரை 70 க்கும் அதிகமானவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக திட்டமிடப்பட்ட குற்றங்கள் குறித்த விசாரணை பிரிவின் சிரேஷ்ட காவல் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக தொடர்ந்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தற்போது கொழும்பை மையப்படுத்திய ஊடகங்களின் ஊடகவியலாளர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.