இந்தோனேஷியாவில் நேற்று முன் தினம் ஏற்பட்ட நில நடுக்கத்தின் போது பள்ளி வாசல் ஒன்றின் தொழுகையை முன்னின்று நடாத்தி வைக்கும் இமாம் ஒருவர் தொழுகையை விடாது நடாத்திச் செல்லும் வீடியோ காட்சி வைரலாக பரவியுள்ளதோடு இனம் மதம் மொழி கடந்து மக்களை கவர்ந்துள்ளது.

சுமத்ராவை அண்மித்துள்ள பாலி மற்றும் லம்பாக் தீவுகளிள் ஏற்பட்ட நிலடுக்கத்தின் போது பாலி நகரத்தில் உள்ள பள்ளிவாசல்களில் மாலை நேர தொழுகை இடம் பெற்றுக் கொண்டிருந்துள்ளது.

இந் நிலநடுக்கத்தின் போது பள்ளிவாசல் கட்டிடம் பெரியளவில் ஆட்டம் கண்ட போதும் தொழுகையில் ஒருமுகப்பட்டு தனது உயிரையும் துச்சமென எண்ணி பள்ளிவாசலின் இமாம் நிலநடுக்கத்தால் உடல் தள்ளாடி தடுமாறிய போதும் பக்கவாட்டில் உள்ள சுவரின் மீது தனது ஒரு கையை அழுத்தி தாங்கியபடி தொழுகையை இடை நிறுத்தாது தலைமைத் தாங்கி நடத்திகொண்டிருந்தார்.

இவ் வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வெளியாகி ஒரு மணித்தியாலத்திற்குள் உலகம் முழுவதிலும் இலட்சக்கணக்கான மக்கள் பார்வையிட்டுள்ளனர்.

இவ் வீடியோ தொடர்பான கருத்து கணிப்பில் குறித்த வீடியோவை இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது ஏனைய மதத்தவர்களும் பார்வையிட்டுள்ளனர்.

நில நடுக்கத்தின் போது உயிருக்கு பயந்து ஓடும் மக்கள் மத்தியில் தனது பக்தியில் கவனம் செலுத்தி தொழுகையை விடாது நடாத்திச் சென்றமை மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த இமாமின் பக்தியை பாராட்டி அணைவரும் குறித்த வீடியோவிற்கு தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.