புதுக்குடியிருப்பு பிரதேச சபையை -அசௌகரியப்படுத்த ஒரு போதும் இடமளிக்கோம்!! 

Published By: Daya

07 Aug, 2018 | 11:11 AM
image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச சபையினை அசௌகரியப்படுத்த ஒருபோதும் இடமளிக்கோம் என்று புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் செ.பிறேமகாந் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு ஒலுமடுப்பகுதியில் கட்டப்பட்ட நூலக திறப்பு நிகழ்வில் நேற்றைய தினம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்துள்ளார். 

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,

புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு ஒரு சொத்து வந்து சேர்ந்துள்ளது என்றுதான் நான் கூறுவேன். இந்த நூலகம் சனசமூக நிலையத்திற்கு ஒப்படைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இது பிரதேச சபையின் சொத்து புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சனசமூக நிலையங்களின் செயற்பாடு மிகவும் குறைவாகக் காணப்படுகின்ற நிலையில், அனேகமான பிரதேசங்களில் கிராம அபிவிருத்தி சங்கங்கள்,மாதர் அபிவிருத்தி சங்கங்கள்தான் சிறப்பாக செயற்பட்டு வருகின்றன.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தினை பொறுப்பெடுத்ததன் பின்னர் சனசமூக நிலையங்களை மீளவும் புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட சனசமூக நிலையங்கள் பாரிய பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றன.

புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட சனசமூக நிலையங்கள் நூல்நிலையங்களை உருவாக்கி மக்கள் சேவையினை செய்து வருகின்றார்கள். அதற்கேற்ற வகையில் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் உள்ள சனசமூக நிலையங்களும் மாற்றி அமைக்கப்படவேண்டும். சனசமூக நிலையங்கள் பதிவு செய்யப்பட்டால் ஆண்டு தோறும் பத்திரிகை செலவிற்காக பத்தாயிரம் ரூபா வழங்கப்படுகின்றது.

எனவே ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் உள்ள சனசமூக நிலையங்கள் அனைத்தும் பதிவு செய்வதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுங்கள். ஒற்றுமை உடைய சமூகமாக நாங்கள் வளர்ந்து நிற்க வேண்டும். தற்போது புதுக்குடியிருப்பு பிரதேச சபை பற்றிய தகவல்கள் செய்திகளாக வெளிவந்து கொண்டிருக்கின்றது.

உண்மையில் பிரதேச சபையினை அபிவிருத்திக்காகவே பொறுப்பெடுத்துள்ளோம். அரசியல் வேலைக்கு நாங்கள் பொறுப்பெடுக்கவில்லை. சிலர் திட்டமிட்டவகையில் தங்களின் தனிப்பட்ட நோக்கங்களுக்காகவும் தங்களை பிரபல்யப்படுத்தவேண்டும் என்பதற்காகவும் பிரதே சபையினை அசௌகரியப்படுத்துகின்றார்கள்.

அவ்வாறான நடவடிக்கைகளுக்கு ஒருபோதும் நாங்கள் இடமளிக்கமாட்டோம். இது மக்களுக்கான சபை என்றும் மக்களுக்காக புதுக்குடியிருப்பு பிரதேச சபை சேர்ந்து இயங்கும். உங்கள் தேவைகளை கோரிக்கைகளாக முன்வையுங்கள் .அவை செய்து தரப்படும். என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31