கிரிக்கெட்டின் நேர்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் சம்பவங்கள் அதிகரிப்பு- ஐசிசி தலைவர்

07 Aug, 2018 | 10:23 AM
image

பந்தை சேதப்படுத்துவது மற்றும் எதிரணி வீரர்களை வார்த்தைகளால் நிந்திப்பது போன்ற விடயங்கள் கிரிக்கெட்டின் கௌரவத்திற்கும் நேர்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என தெரிவித்துள்ள ஐசிசி தலைவர் டேவிட் ரிச்சட்சன்  சமீபத்தைய மோசமான நடத்தைகளை வீரர்கள் நிறுத்திக்கொள்ளவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

நேர்மையே கிரிக்கெட் மரபனு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இதற்கு பாதிப்பு ஏற்படுத்தும் பல விடயங்கள் சமீபத்தில் இடம்பெற்றுள்ளன இதனை முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எதிரணி வீரர்களை வார்த்தைகளால் நிந்திப்பது அவர்களை வார்த்தைகளை துஸ்பிரயோகம் செய்வதற்கு சமம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆட்டமிழந்த வீரர்களை வெளியேறுமாறு வீரர்கள் சைகை செய்வது தேவையற்ற  விதத்தில் மோதல், பந்து சேதப்படுத்தப்பட்டுள்ளது என  நடுவர் தீர்ப்பளித்தால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விளையாடமாட்டோம் என மறுத்தல் போன்றவையும் கிரிக்கெட்டின் நேர்மையை பாதிக்கும் செயல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகிற்கு நாங்கள் காண்பிக்க சித்தரிக்க விரும்பும் கிரிக்கெட் இதுவல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பயிற்றுவிப்பாளர்களும் வீரர்களும் தங்கள் நடத்தையில் முன்னேற்றத்தை காண்பிக்கவேண்டும், பயிற்றுவிப்பாளர்கள் வேகமாக தங்கள் அணியின் வீரர்களின் பக்கம் சாய்கின்றனர்,எனவும் குறிப்பிட்டுள்ள ரிச்சட்சன் பயிற்றுவிப்பாளர்கள்   நடுவர்கள் பக்கச்சார்பாக நடக்கின்றனர் என குற்றச்சாட்டுவதாகவும்  தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right