அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற விமானமொன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். 

அலாஸ்காவில் கடல் மட்டத்திலிருந்து 20 ஆயிரம் அடி உயரத்தில் டேனலி தேசிய பூங்க அமைந்துள்ளது. இங்குள்ள பனிப்  படர்ந்த மலைப்பகுதிகளை சுற்றிப்பார்க்க போலந்து நாட்டை சேர்ந்த 4 பேர் மற்றும் விமானி உள்பட 5 பேர், சிறிய ரக விமானம் ஒன்றில் வந்தபோது அதிகளவிலான பனிப்பொழிவு மற்றும் மோசமான வானிலை காரணமாக கடல் மட்டத்தில் இருந்து 11 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்துகொண்டிருந்த போதே மேற்படி விபத்து சம்பவித்துள்ளது.

இந்த விபத்தில் போலந்து நாட்டை சேர்ந்த 4 சுற்றுலா பயணிகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததுடன் விமானி சம்பந்தமாக தகவல்கள் இன்னும் ஏதும் வெளிவரவில்லை.