முல்லைத்தீவு மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட கடற்தொழில் நடவடிக்கையினை கட்டுப்படுத்தக் கோரியும் கடல் வளத்தை அழிக்கும் சுருக்கு வலை அனுமதியை இரத்து செய்யகோரியும்  மீனவர்கள் மேற்கொண்ட போராட்டம் இன்று ஜந்தாவது நாளாக தொடர்ந்தவண்ணமுள்ளது.

இந்நிலையில் இன்று இரவு போராட்டம் மேற்கொண்டுவரும் மக்களை வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது மீனவ உஅமைப்புக்களின் தலைவர்கள் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் ஆகியோர் உடன் இருந்து மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை தொடர்பில் தெரிவித்துள்ளார்கள். 

தாங்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்திற்கு திருகோணமலை, மன்னார், யாழ்ப்பாணம் மாவட்டங்களைச் சேர்ந்த கடற்தொழில் அமைப்புக்களும் மற்றும் பொது அமைப்புக்களும் ஆதரவு தெரிவித்து தங்களுடன் தொலைபேசியில் உரையாடி வருகின்றார்கள் என்பதை நாடாளுமன்ற உறுப்பினருக்கு தெரியப்படுத்தியுள்ளார்கள்.

இதன்போது மீனவர்களின் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவினை தெரிவிப்பதுடன் தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் ஒவ்வொரு மாவட்டங்களிலும் நடத்தவேண்டும் என்றும் தெரிவித்த செல்வம்  அடைக்கலநாதன் கடற்தொழிலாளர்கள் மேற்கொண்டு வரும் போராட்த்தை உடனே பாராளுமன்றில் கொண்டுவரவுள்ளதாகவும் இந்த போராட்டத்திற்கு சார்பான மலையக பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் ஆதரவளிக்ககூடியவர்களை ஒருமித்து ஒரு கடிதத்தை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி கதைக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளதுடன் 

எதிர்வரும் 12 ஆம் திகதி மீன்பிடி அமைச்சர் முல்லைத்தீவு  வருகின்ற போது ஒரு முடிவினை எட்டுகின்ற வாய்ப்பினை கொண்டுவருவதற்கு பாராளுமன்றில் நாளை விசேட விவாதம் ஒன்றை கொண்டுவருவதோடு கடற்தொழில் நீரியல் வளத்துறை அசைமச்சர் முல்லைத்தீவிற்கு வருகின்றபோது நாங்களும் வருவோம் என்றும் நாடாளுமன்றில் மீனவர்களின் பிரச்சனைக்காக அதரவு தெரிவிக்கின்ற அனைவரையும் ஈர்த்து கவனயீர்ப்பு விவாதத்திற்கு கொண்டு வந்து விவாதிக்க முயற்சி எடுத்துள்ளோம் என்றும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.