பென் ஸ்டோக்ஸ் மீது நீதிமன்றில் கடும் குற்றச்சாட்டுகள்

Published By: Rajeeban

06 Aug, 2018 | 08:43 PM
image

இங்கிலாந்தின் சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ் இரவுவிடுதியொன்றில் மோதலில் ஈடுபட்டமை தொடர்பான வழக்கு இன்று ஆரம்பமாகியுள்ளது.

இதன் போது அரசதரப்பு சட்டத்தரணிகள் பென்ஸ்டோக்ஸ் தற்பாதுகாப்பு என்ற எல்லையை மீறி செயற்பட்டார் என தெரிவித்துள்ளனர்.

பென்ஸ்டோக்ஸ் தன்னிலை இழந்து பழிவாங்கும் நோக்கில் தாக்க தொடங்கினார், எனதெரிவித்துள்ள சட்டத்தரணிகள் பென்ஸ்டோக்சும் அவருடன் இருந்தவர்களும் தாங்கள் தாக்கப்பட்டனர் என கருதியதை தொடர்ந்து இந்த வன்முறையில் ஈடுபட்டனர் என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் பென்ஸ்டோக்ஸ் எம்பார்கோ இரவுவிடுதிக்குள்  நுழைய முயன்ற வேளை இடம்பெற்ற மோதல்கள் தொடர்பிலேயே அவர் நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டுள்ளார். ஸ்டோக்சுடன் அவ்வேளை அலெக்ஸ் ஹேலும் காணப்பட்டார்.

குறிப்பிட்ட விடுதியின் வாயில்காவலாளி பென்ஸ்டோக்சை உள்ளே அனுமதிக்க மறுத்த வேளை  ஸ்டோக்ஸ் சீற்றமடைந்து ஹோட்டலில் இருந்து வெளியே சென்று கொண்டிருந்த ஓரினச்சேர்க்கையாளர்கள் இருவரை தாக்கியுள்ளார் என அதிகாரிகள் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர்..

மேலும் பென்ஸ்டோக்ஸ் சிகரெட்டினால்  ஒருவரை சுட்டார் எனவும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இந்த வன்முறைகள் எப்படி ஆரம்பித்தன என்பது  சம்பந்தப்பட்டவர்களுக்கே தெரியும் எனினும் இந்த வன்முறையை இலகுவாக ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தியிருக்கலாம் என அரச தரப்பு சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

இந்த வழக்குகளில் ஆஜராக வேண்டும் என்பதால் இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்டிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09