மினுவாங்கொடை துப்பாக்கி சூடு: இருவர் கைது

Published By: Digital Desk 4

06 Aug, 2018 | 07:49 PM
image

(ரவி கலைச்செல்வன்)

மினுவாங்கொடை யடியான சந்தியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் வயோதிபர் ஒருவர் பலியாகியுள்ள நிலையில் குறித்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை மினுவாங்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த கொலை. இரு தரப்பினரிடம் காணப்பட்டு வந்த பழைய தகராறு ஒன்றின் பலி தீர்க்கும் செயலே இது என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மினுவாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யடியான சந்தியில் நபர் ஒருவர் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 11.10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் வயோதிபர் ஒருவர் பலியாகியுள்ளார். 

மினுவாங்கொடையைச் சேர்ந்த 68 வயதுடைய விஜயமுனி ஜஸ்டின் ரத்னசிறி சில்வா என்பவரே இவ்வாறு பலியானவராவார்.

பட்டம் விடுதல் தொடர்பாக இரு தரப்பினரிடையே கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் திகதி ஏற்பட்ட தகராறில் மேற்கொள்ளப்பட்ட கத்தி குத்து தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் பலியாகியுள்ளனர். 

இது தொடர்பான வழக்கு மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வரும் நிலையில் சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டவர்களினாலேயே பலி தீர்க்கும் முகமாக இவ்வாறு துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

இந்நலையில் குறித்த கொலை தொடர்பில் இரு சந்தேக நபர்களை மினுவாங்கொடை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த கொலைச்சம்பவத்தில்  சந்தேக நபர்கள் இருவரை கைது செய்துள்ளதோடு அவர்கள் பயனித்த மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்  கைது செய்யப்பட்டவர்களிடம் கொலை தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19