(எம்.மனோசித்ரா)

திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் போதை மாத்திரைகளுடன் இருவரை க‍ைதுசெய்துள்ளதாக கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். 

திருகோணமலை போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலுக்கிணங்கவே கிண்ணியா நகர்பகுதியிலுள்ள தனியார் மருந்து விற்பனை நிலையமொன்றின் அருகில் வைத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டதுடன் இவர்களிடமிருந்து 300 க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வரும் கிண்ணியா பொலிஸார் நாளயை தினம் அவர்களை கிண்ணியா நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.