(இராஜதுரை ஹஷான்)

இலங்கையின் உள்நாட்டு போரின்  இறுதிக்கட்ட  யுத்ததின் போது  இடம் பெற்றதாக கூறப்படும் மனித  உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில்  சர்வதேச விசாரணை ஏதும் நடத்தப்படக் கூடாது என அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த அரசாங்கத்தினை பழிவாங்கும் நோக்கில் இலங்கைக்கு எதிராக புலம்பெயர் அமைப்புக்கள் முன்வைத்த பொய்யான  அறிக்கைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை இன்று விசாரணைகளை மேற்கொண்டு ஒருதலைபட்சமாகவே செயற்பட்டு  வருகின்றது.  

யுத்தக் குற்றங்கள் இடம் பெற்றதாக குறிப்பிட்டு புதிய அரசியலமைப்பினை உருவாக்கி கொள்வதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான நோக்கமாக காணப்படுகின்றது.  கூட்டமைப்பின் பொது நோக்கங்களுக்காக அரசியலில் செல்வாக்கு செலுத்தவில்லை சுய நல விடயங்களை மையப்படுத்தியே செயற்படுகின்றனர்.

இலங்கையில்  பொறுப்புக் கூறல் விடயத்தில் உள்ளக பங்பளிப்புக்கள் இல்லாமல் சர்வதேச விசாரணைகள் இடம்பெற்று முடிந்துள்ளமை எமக்கு எதிரானதாகவே காணப்படுகின்றது என்றார்.