டுபாய் நோக்கி பயணிப்பதற்காக கட்டுநாயக்க விமான நிலயத்திற்கு  வந்த முன்னாள் விமானப்படை விமானி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

குறித்த முன்னாள் விமானப்படை விமானி பிரித்தானியாவில் உற்பத்தி செய்யப்பட்ட 6.35 மில்லிமீற்றர் ரக கைத் துப்பாக்கியொன்றை தனது பயணப்பொதியில் மறைத்துக் கொண்டு டுபாய்  நோக்கிச் செல்ல முற்பட்ட வேளையிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ராஜகிரிய பிரதேசத்தை சேர்ந்தவர் 55 வயதுடைய முன்னாள் விமானப்படை விமானியே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவராவார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபரிடம் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.