‘நான் செய்த குறும்பு’ அடல்ட் கொமடி படம் கிடையாது என அப்படத்தின் நாயகனான கயல் சந்திரன் தெரிவித்திருக்கிறார்.

மகா விஷ்ணு என்ற அறிமுக இயக்குநரின் இயக்கத்தில் நடிகர் கயல் சந்திரன், அஞ்சுகுரியன் இணைந்து நடிக்கும் ‘நான் செய்த குறும்பு’ படத்தின் தொடக்கவிழா நேற்று சென்னையில் நடைபெற்றது.  

இதில் ஐந்து கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா கலாச்சார மரபு படி வெகுவிமரிசையக நடத்தப்பட்டது.

இதன் பிறகு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்து சிலர் சில விமர்சனங்களை முன்வைத்தனர். இதற்கு பதிலளித்து பட நாயகன் கயல் சந்திரன் தெரிவிக்கையில்,‘இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பார்த்து ட்விட்டரில் பலவிதமான கருத்துகள் வந்தன. 

சிலர் ஒரு மாதிரியான படமாக இருக்குமோ என்று கூறியிருந்தார்கள். நான் சொல்கிறேன் இது சுரேஷ் கிருஷ்ணாவின் `ஆஹா' படம் போல் குடும்பத்துடன் பார்க்கும் படமாக இருக்கும். நான் செய்த குறும்பு அடல்ட் கொமடி படம் கிடையாது. 

பெண்களை கிண்டல் செய்யும் விதத்தில் இந்த போஸ்டரை வெளியிடவில்லை. பெண்கள் படும் கஷ்டத்தை ஒரு ஆணும் பட வேண்டும். அப்போது தான் அவர்கள் அனுபவிக்கும் வேதனைகள் புரியும் என்ற கோணத்தில் தான் இந்த படம் உருவாகவிருக்கிறது.’ என்றார்.