மன்னார் பிரதேசத்தில் முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் எவ்வித தடையுமின்றி செயற்படுவதால் மீண்டும் விடுதலைப்புலிகள் அப்பகுதியில் தலைதூக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

மன்னாரில் மீண்டும் விடுதலைப்புலிகளின் ஆட்சி இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகின்றன.

மீண்டும் விடுதலைப்புலிகளின் ஆட்சி உருவாகி விட்டது அவ்வாறாயின் தமிழ் மக்களிற்கான தீர்வு  என்னவெனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மன்னார் பிரதேசத்தில் முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் தங்கள் விருப்பத்தின் படி செயற்படுகின்றனர் அவர்களை தடுக்க எந்த நடவடிக்கையும் இடம்பெறவில்லை எனவும் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.