கலகெதர – உடஹிகுல்கல பிரதேசத்தில்  8 வயது சிறுமி ஒருவர்  பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி உணவு வாங்குவதற்காக விற்பனை நிலையத்திற்கு சென்ற போது விற்பனை நிலையத்தின் உரிமையாளார், சிறுமியை அறை ஒன்றுக்குள்  அழைத்து சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தெரியவந்துள்ளது.

மருத்துவ பரிசோதனைக்காக சிறுமி, மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.