அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்களின் அட்டகசாத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். 

கடந்த சனிக்கிமை இரவு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது , 

இடைக்காடு சனசமூக நிலையம் , அதனுடன் இணைந்துள்ள தாய் - சேய் நிலையம் என்பவற்றின் யன்னல் கண்ணாடிகள் அடித்து நெருக்கபட்டு உள்ளது. அதனால் 70  ஆயிரம் ரூபா வரையில் சேதம் ஏற்பட்டு உள்ளது என தெரிவிக்கபடுகின்றது. 

அத்துடன் அச்சுவேலி சன்னதி வீதி பத்தமேனியில் உள்ள வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் நா. இராசேந்திரனின் வீட்டின் கேற் அடித்து உடைக்கப்பட்டு தகரங்களை கூரிய ஆயுதங்களால் குத்தி கிழித்துள்ளனர். 

அதேவேளை அப்பகுதியில் உள்ள  பத்தமேனி தீத்தாங்குளம் பிள்ளையார் ஆலய பூசகரின் வீட்டு கேற்றினையும் , ஆசிரியை ஒருவரின் வீட்டு கேற்றினையும் அடித்து உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். 

குறித்த சம்பவங்கள் தொடர்பில் தனித்தனியே அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டு உள்ளது. 

முறைப்பாடுகளின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த அச்சுவேலி பொலிசார் சந்தேகத்தில் ஓர் இளைஞரை கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்டுள்ள இளைஞரிடம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.