மாகாண சபைத் தேர்தல் குறித்து கலந்துரையாடுவதற்காக ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்குமிடையேயான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது. 

இந்த கலந்துரையாடலில் ஈடுபடுவதாற்காக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியிலுள் உள்ள கட்சியின் தலைவர்கள் பங்கு கொள்ளவுள்ளனர். 

இந் நிலையில் மாகாண சபைத் தேர்தல் தொடர்பான இறுதி தீர்மானத்தை இம் மாத இறுதிக்குள் அறிவிக்க, மாகாண சபைகள் தேர்தல்கள் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட குழு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.