இந்தோனேசிய பூகம்பத்தில் 80 பேர் பலி--வீடியோ இணைப்பு

Published By: Rajeeban

06 Aug, 2018 | 06:47 AM
image

இந்தோனேசியாவின் லொம்பொக் தீவுகளை தாக்கிய பூகம்பம் காரணமாக 80 ற்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளதுடன்  பலர் காயமடைந்துள்ளனர்.

பலர் காயமடைந்துள்ளர் வீடுகள் பல முற்றாக அழிந்து போயுள்ளன இதன் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

பூகம்பத்தை தொடர்ந்து இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகள் காரணமாகவே பெருமளவு மக்கள் பலியாகியுள்ளனர்.

லம்பக்கின் முக்கிய நகரான மட்டராமில் பல வீடுகள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பாதிக்கப்பட்ட மக்கள் பாரிய அதிர்வுகள் காரணமாக தாங்கள் வீட்டை விட்டு ஓடியதாக தெரிவித்துள்ளனர்.

அனைவரும் பதட்;டமடைந்தோம்  அனைவரும் வீட்டை விட்டு ஓடினோம் என இனான் என்பவர் தெரிவித்துள்ளார்;

மட்டரம் நகரின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலை காணப்படுகின்றது.

இதேவேளை முக்கிய மருத்துவமனைகளில் காணப்பட்ட நோயாளிகள் பூகம்பத்தின் பின்னர் வீதிக்கு கொண்டு செல்லப்பட்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதலில் சிறிய அதிர்வுகள் காணப்பட்டன பின்னர் அவை பலத்த அதிர்வுகளாக மாறின மக்க்ள அதனை உணர்ந்து பூகம்பம் என அலறியபடி வீதிக்கு வந்தனர் என ஒருவர் குறிப்பிட்டுள்ளார்

லொம்பேர்க் மற்றும் பாலி நகரங்களில் இடிபாடுகள் காணப்படுவதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10