இலங்கை அணி தென்னாபிரிக்காவிற்கு எதிரான ஒரு நாள் தொடரை இழந்துள்ள நிலையில் அணித்தலைவர் மத்தியுஸ் பந்து வீச்சு குறித்து ஏமாற்றம் வெளியிட்டுள்ளார்.

எங்கள் அணி பந்துவீச்சை ஆரம்பித்த விதம் குறித்து நான்  ஏமாற்றமடைந்துள்ளேன் இறுதி 10 ஓவர்களையும் கூட நாங்கள் திட்டமிட்டபடி வீசவில்லை என மத்தியுஸ் தெரிவித்துள்ளார்.

இந்த ஆடுகளத்தில் 360 என்பது அதிகமான எண்ணிக்கை,நாங்கள் எங்கள் திட்டங்களை சரிவர நடைமுறைப்படுத்தவில்லைஎனவும்மத்தியுஸ் தெரிவித்துள்ளார்.

தனஞ்செய டி சில்வா லகிருகுமார விளையாடிய விதங்களே இந்த போட்டியில் கிடைத்த சாதகதன்மை எனவும் குறிப்பிட்டுள்ள மத்தியுஸ் தென்னாபிரிக்காவின் ரீசா ஹென்ரிக்ஸ் சிறப்பாக விளையாடினார் டுமினி இனிங்ஸை சிறப்பாக முடித்து வைத்தார் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இன்றைய போட்டியில்( தனது முதல் போட்டியில் )சதமடித்த ஹென்டிரிக்ஸ் தனது முதல் போட்டியில் விளையாடி அணிக்கு பங்களிப்பு செய்தமை குறித்து திருப்தி வெளியிட்டுள்ளார்.

நான் ரி 20 போட்டிகளில் விளையாடியுள்ளேன் ஆனால் ஒரு நாள் போட்டி என்பது வித்தியாசமானது என குறிப்பிட்டுள்ள அவர் தென்னாபிரிக்க அணியில் இடம்பெறுவது கடினமான விடயம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.