பாகிஸ்தானில் 9 குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகப்படுத்தி, அவர்களில் 4 குழந்தைகளை கொன்ற நபருக்கு 13 தூக்கு தண்டனைகளுடன் ஏராளமான அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் கசூர் நகரை சேர்ந்த 7 வயது சிறுமியை துஷ்பிரயோகப்படுத்தி, கொன்ற குற்றத்திற்காக இம்ரான் அலி என்பவர் கடந்த பெப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்ட நிலையில் அவரது வழக்கு லாகூர் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இம்ரான் அலிக்கு தூக்கு தண்டனையும், 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 40 இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

தொடர்ந்து, அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் 8 சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்தது தெரிய வந்ததோடு அவர்களில் 3 சிறுமிகளை  துஷ்பிரயோகம் செய்து கொலை செய்துள்ளதும் தெரிந்தது.

இந்நிலையில், 3 சிறுமிகளை கொன்ற வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 3 சிறுமிகளை கொன்ற வழக்கில் இம்ரான் அலிக்கு 12 தூக்கு தண்டனைகளை விதித்து உத்தரவிட்டதோடு மேலும், 60 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தனர். 

அந்த தொகையில் இருந்து 30 லட்சம் ரூபாயை கொலை செய்யப்பட்ட 3 சிறுமிகளின் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் உத்தரவிட்டனர்.