(நா.தினுஷா) 

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு மாதங்களில் வெகுவாக அதிகரித்துள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 5886 ஆக அதிகரித்துள்ளதுடன் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 1552 நோயார்கள் இணங்காணப்பட்டுள்ளதாக மாதாந்த டெங்கு நோய் கட்டுப்பாட்டு  பிரிவு  அறிக்கை வெளியிட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இவ்வருடத்தின்  முதல் காலாண்டில்  இணங்காணப்பட்ட டெங்கு நோயளர்களின் எண்ணிக்கை 7249 ஆகும். ஜனவரி மாத்துக்குப்பின்பு டெங்கு நோயளர்களின் எண்ணிக்கை சடுதியாக குறைவடைந்திருந்தாலும் கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் 5 ஆயிரத்துக்கு அதிகமான நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளர்.

குறிப்பாக கொழும்பு மாவட்டமே அதிகம் டெங்கு நோயின் தாக்கம் காணப்படும் மாவட்டமாக காணப்படுகிறது. அந்த வகையில் கடந்த மாதத்தில் மாத்திரம் கொழும்பு மாநகரசபைக்குட்பட்ட பிரதேசத்தில் 392 நோயாளர்களும் கொழும்பு மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களில் 1160 நோயாளர்களும் இணங்காணப்பட்டுள்ளனர்.