(இராஜதுரை ஹஷான்)

பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டில் ஒருமைப்படுத்திய தேசிய ஜனநாயகத்தை அழிக்கும் நடவடிக்கைகளையே அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பிரதிநிதிகளான  ஐவன் டோஹடி,  டேவிட் மெக்ராட்ஸ் ஆகியோரிடம் எடுத்துரைத்துள்ளார்.  

பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸின் இல்லத்தில் நேற்று நடைபெற்ற இந்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பனர்களான நாமல் ராஜபக்ஷ மற்றும் தாரக பாலசூரிய ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பின் போது தேசிய அரசாங்கத்தில் காணப்படும் பல்வேறு குறைபாடுகளையும் சுட்டிக்காட்டிய அவர் தேர்தல்களை உரிய காலத்தில் நடத்தாது ஜனநாயகத்தை அழிக்கும் செயற்பாடுகளையே அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பனர்களின் சம்பள உயர்வு தொடர்பாகவும் அவர்களிடம் எடுத்துரைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.